இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதெ...
கவனம் ஈர்க்கும் நரிவேட்டை தமிழ் டிரைலர்!
டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் தமிழ் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.
‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அனுராஜ் மனோகர். இவர் கிரைம் திரில்லர் பாணியில் நரிவேட்டை படத்தினை இயக்கியுள்ளார்.
இதில், டொவினோ தாமஸ் நாயகனாகவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
3 வாரங்களுக்கு முன்பாக மலையாளத்தில் வெளியான டிரைலருக்கு நல்ல வரவெற்பு இருந்தது.
இந்நிலையில், இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படத்தின் தமிழ் டிரைலர் டிரைலர் நள்ளிரவு வெளியானது.
மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்தப் படம் மே.23ஆம் தேதிமுதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
நரிவேட்டை மலையாள டிரைலர் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.