செய்திகள் :

மண்சோறு சாப்பிட்டால் படம் வெற்றி அடையுமா? ரசிகர்களைக் கண்டித்த சூரி!

post image

மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களின் செயலுக்கு நடிகர் சூரி கடுமையான கண்டனத்தைக் கூறியுள்ளார்.

மாமன் படம் வெற்றியடைய சூரியின் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி இதற்கு தனது கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து சூரி கூறியதாவது:

எனது கவனம்பெறவோ அல்லது படம் வெற்றியடையவோ மண் சோறு சாப்பிடுவது தவறான செயல்.

மண்சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா? கதை நன்றாக இருந்து நன்றாக எடுத்தால் படம் ஓடும். இப்படி முட்டாள்தனமாக மண்சோறு சாப்பிடாதீர்கள் தம்பிகளா. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

நான் சாப்பாடு இல்லாமல் கஷடப்பட்டு இந்த இடத்துக்கு முன்னேறி வந்துள்ளேன். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சோற்றை மதிக்காதவர்கள் எனது தம்பிகளாகவும் எனது ரசிகர்களாகவும் இருக்க தகுதியே இல்லை. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு 4, 5 பேருக்கு சாப்பாடு எதாவது வாங்கிக் கொடுத்திருக்கலாமே?

படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்தமாதிரியான செயல்கள் எனக்கு வருத்தமளிக்கிறது எனக் கூறினார்.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நாயகனாக மாறியிருக்கிறார் சூரி. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மாமன் திரைப்படம் இன்று (மே.16) திரையரங்குகளில் வெளியானது.

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்

இத்தாலியன் ஓபன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தி... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: இயக்குநா் கௌதமனின் மகன் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா நகரில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் கெளதமன் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். அனகாபுத்தூா் காமராஜபுரம் அருகே உள்ள கணபதி நகா் இரண்டாவது தெருவைச் ச... மேலும் பார்க்க

வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள... மேலும் பார்க்க