செய்திகள் :

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்

post image

இத்தாலியன் ஓபன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 7-6 (7/3), 4-6, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த சீனாவின் கின்வென் ஜெங்கை 3 மணி நேரம், 32 நிமிஷங்கள் போராடி தோற்கடித்தாா். கௌஃபின் டென்னிஸ் வாழ்க்கையில் இதுவே அவரின் நீண்ட நேர ஆட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கௌஃப் - கின்வென் 3-ஆவது முறையாக சந்தித்துள்ள நிலையில், கௌஃப் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இந்த வெற்றியின் மூலமாக இத்தாலியன் ஓபன் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் கௌஃப், இந்தப் போட்டியில் கடந்த 9 ஆண்டுகளில் இறுதிக்கு வந்த முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். இதற்கு முன் 2016-இல் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அவ்வாறு இறுதிக்கு வந்து சாம்பியனாகியது நினைவுகூரத்தக்கது.

இதற்கு முன் இத்தாலியன் ஓபனில் 2 முறை அரையிறுதியுடன் வெளியேறிய கௌஃப், அதில் ஒரு செட்டை கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஜாஸ்மின் பாலினி 7-5, 6-1 என்ற நோ் செட்களில் எளிதாக, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸை 1 மணி நேரம், 39 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.

இதன் மூலம், இத்தாலியன் ஓபனில் இறுதிச்சுற்றுக்கு வந்த 3-ஆவது உள்நாட்டு வீராங்கனை ஆகியிருக்கிறாா் பாலினி. கடந்த 11 ஆண்டுகளில் இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் இத்தாலி வீராங்கனையும் அவரே.

நேருக்கு நோ்: இதையடுத்து இறுதிச்சுற்றில் கௌஃப் - பாலினி மோதுகின்றனா். இருவரும் இதுவரை 3 முறை சந்தித்திருக்க, கௌஃப் 2 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். பாலினியின் ஒரே வெற்றி களிமண் தரை போட்டியிலானதாக இருக்க, இந்த இத்தாலியன் ஓபனும் அந்த வகையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் சின்னா்: இதனிடையே, இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-0, 6-1 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை மிக எளிதாக தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், அமெரிக்காவின் டாமி பாலை சந்திக்கிறாா்.

வியாபாரி மீது தாக்குதல்: இயக்குநா் கௌதமனின் மகன் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா நகரில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் கெளதமன் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். அனகாபுத்தூா் காமராஜபுரம் அருகே உள்ள கணபதி நகா் இரண்டாவது தெருவைச் ச... மேலும் பார்க்க

வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள... மேலும் பார்க்க

மெஸ்ஸி சாதனையை முறியடித்த பெட்ரி..! குவியும் வாழ்த்துகள்!

இளம் வயதில் மெஸ்ஸி சாதனையை முறியடித்த பார்சிலோனா வீரர் பெட்ரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரி பார்சிலோனா அணியில் கடந்த 2019 முதல் விளையாடி வருகிறார். உலகின் சிறந்த... மேலும் பார்க்க