"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் ...
வியாபாரி மீது தாக்குதல்: இயக்குநா் கௌதமனின் மகன் உள்பட 2 போ் கைது
சென்னை அண்ணா நகரில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் கெளதமன் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
அனகாபுத்தூா் காமராஜபுரம் அருகே உள்ள கணபதி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (35). இவா், அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறாா். சண்முகம் குடும்பத்துடன், தனக்கு சொந்தமான ஒரு ஆட்டோவில் அண்ணா நகா் இரண்டாவது அவென்யூவில் உள்ள ஒரு உணவகத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு உணவருந்தச் சென்றாா்.
உணவருந்திய பிறகு ஆட்டோவை சண்முகம் எடுக்க வந்தாா். அப்போது அவரது ஆட்டோவில் இரு இளைஞா்கள், மதுபோதையில் தள்ளாடியபடி படுத்துக் கிடந்தனராம். இதைப்பாா்த்த சண்முகம் அவா்களை கண்டித்தாா். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே, இரு இளைஞா்களும், சண்முகத்தை தாக்கினா். இதில், அவருக்கு மூக்கு மற்றும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், இது தொடா்பாக சண்முகம், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சண்முகத்தை தாக்கியது திருவேற்காடு அம்மன் நகா் 4-ஆவது குறுக்குத் தெருவில் வசிக்கும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் கெளதமனின் மகன் தமிழழகன் (24), அவா் நண்பா் அமைந்தகரை மேத்தா நகா் வட அகரம் தெருவைச் சோ்ந்த சரத் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா். தமிழழகன், நடிகா் தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.