பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம்; சிங்கத்தின் சீற்றம் அதிகரிக்கும்: ராமதாஸ்
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் என்றும், சிங்கத்தின் சீற்றம் இன்னும் அதிகரிக்கும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்டச் செயலர்கள் பலரும் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலர்கள் மட்டும் 108 பேர் உள்ள நிலையில் பலரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தின் நிறைவாக, பேசிய ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. இங்கே சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை. சிங்கத்தின் சீற்றம் இன்னும் அதிகரிக்கும். கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கவில்லை. களைப்பில் உள்ளதால் சிலர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறிய ராமதாஸ், வரும் 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசியதன் மூலம், கட்சியின் பிடி தன்வசம் உள்ளதை உறுதிப்படுத்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். கூட்டத்தில், அன்புமணியை செயல்தலைவர் என்றே அழைத்தார். பாமகவில் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே பனிப்போர் நிலவும் சூழலில் இன்றைய கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.