காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!
`நானே ராஜா; அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்..!’ - ராமதாஸ் கொடுத்த பதில்
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வித்தைகளைச் சொல்லி கொடுத்தேன்.

`பாமக-வில் நானே ராஜா’
50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கொல்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி மாற்றப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அன்புமணி கூட்டத்திற்கு வராதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “ அன்புமனி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்” என்று பதில் அளித்திருக்கிறார்.
மேலும், ``சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்றார். மேலும் பாமக-வில் தானே ராஜா என்றும் தெரிவித்தார்.