செய்திகள் :

நெல்லை: திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 3 பேர் கைது - ரகசிய இடத்தில் விசாரணை

post image

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர். பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராகச் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக உள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு (14-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு அவரது வீட்டில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.

வீட்டுக்குள் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியதில் பொருள்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நெல்லை - திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை - திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அதன்படி, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சர்வ சாதாரணமாக தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பாட்டிகளில் நிரப்பி, பெட்ரோல் குண்டுகளாக வீட்டுக்குள் வீசுவது தெரியவந்தது.

பின்னர், அதே பைக்கில் நான்கு பேரும் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் முகத்தில் துணி கட்டியிருந்ததாலும், அதிகாலை இருட்டாக இருந்ததாலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அடுத்தடுத்த சம்பவம்..!

இதனிடையே, அதே கும்பல் நெல்லை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட டவுன் வயல்தெருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டு வீசியது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

ஒரே கும்பல் ஒரே நாளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

அதனால் அந்தக் கும்பலைப் பிடிக்க மாவட்ட காவல்துறை சார்பாக 5 தனிப்படைகளும் மாநகர காவல்துறை சார்பாக இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் தேடி வந்தனர்.

அதற்குள் அந்த கும்பல் நெல்லையில் இருந்து நான்குவழிச் சாலை மார்க்கமாக சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள ஏர்வாடி நகரத்துக்குச் சென்றுவிட்டது.

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்
பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்

அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன் அடித்து உதைத்து ரூ.20,000 ரொக்கப் பணத்தைப் பறித்ததோடு, ஓசியில் பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

குற்றவாளிகள் நால்வரும் முகத்தை துணியால் கட்டியிருந்த போதிலும், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர்களின் படம் துல்லியமாக இருந்தது. அதைக் கொண்டு போலீஸார் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தினர்.

அடையாளம் தெரிந்தது

காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த கும்பல் குறித்த விவரம் தெரியவந்தது. அவர்கள், டவுன் மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய 4 பேர் என்பது அடையாளம் தெரிய வந்ததும் அந்த கும்பலைப் பிடிக்கப் போலீஸார் திட்டமிட்டனர்.

அவர்கள் திருவனந்தபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் கீதா தலைமையிலான தனிப்படையினர் கேரளாவுக்குச் சென்றனர்.

police
police

திருவனந்தபுரத்தில் முகாமிட்ட தனிப்படை போலீஸார் அங்கு முகாமிட்டு தீவிரமாகத் தேடிய நிலையில் நேற்று இரவு ஒரு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரைக் கைது செய்து, நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு இளஞ்சிறாரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

`யார் இந்த தியாகி... திமுக-வின் புதிய பவர் சென்டர் ரத்தீஷா?"- கேள்விகள் எழுப்பும் அதிமுக

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்கு... மேலும் பார்க்க

'என் தந்தை கொல்லப்பட வேண்டும் என்கிறார்' குற்றம்சாட்டும் ட்ரம்ப் மகன்; '86 47' எண்ணின் பின்னணி என்ன?

'என் தந்தை (ட்ரம்ப்) கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறார்' என்று அமெரிக்க பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் காமி மீது குற்றம்சாட்டியுள்ளார், ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர். மேலே கூறியிருப்பதுப... மேலும் பார்க்க

TASMAC : தலைக்கு மேல் தண்ணீர்; அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? நெருக்கும் இ.டி... சிக்கலில் மேலிடம்!

"டாஸ்மாக் தொடர்பாக பதிந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன..?", என கேள்விக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யச் சொல்லி சமீபத்தில் உ... மேலும் பார்க்க

'உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கம் திமுக'- கே.டி‌.ராஜேந்திர பாலாஜி சாடல்!

விருதுநகர் மாவட்டம்,, ராஜபாளையம் நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த... மேலும் பார்க்க

Protest Haka: மாவோரி பழங்குடியின எம்.பி-க்கள் சஸ்பெண்ட்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடவடிக்கை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா, மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலை பாடியவார... மேலும் பார்க்க

பாமக: `இது அப்பா-மகன் போர் மட்டும் அல்ல’ - கூட்டத்தை புறக்கணித்த அன்புமணியும், ராமதாஸ் ரியாக்‌ஷனும்

`பா.ம.க-வின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்’ என்று நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்க... மேலும் பார்க்க