ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
லா லீகா கோப்பையை வென்றது பார்சிலோனா: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பார்சிலோனா கால்பந்து அணி லா லீகா கோப்பையை 28-ஆவது முறையாக வென்று அசத்தியுள்ளது.
லா லீகா கோப்பை ஸ்பெயின் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராகும். இந்த சீசனில் தனது 36ஆவது போட்டியில் விளையாடிய பார்சிலோனா அணி எஸ்பானியோல் உடன் மோதியது.
இந்தப் போட்டியில் 2-0 என பார்சிலோனா வென்றதன் மூலம் லா லீகா கோப்பையை உறுதி செய்துள்ளது.
மொத்தம் 38 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பார்சிலோனா அணி 36 போட்டிகளில் 85 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இரண்டாம் இடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்றாலும் பார்சிலோனாவை விட குறைவான புள்ளிகளே பெறுமென்பதால் கோப்பை யாருக்கென உறுதிசெய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் 76 சதவிகித பந்தினை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பார்சிலோனா அணி 89 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.
53-ஆவது நிமிஷத்தில் லாமின் யமாலும் 90+5-ஆவது நிமிஷத்தில் ஃபெர்மின் லோபஸும் கோல் அடித்தார்கள்.
எஸ்பானியோல் அணியில் 80-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
லா லீகா கால்பந்து தொடரின் வரலாற்றில் அதிகமுறை கோப்பை வென்ற (36) அணியாக ரியல் மாட்ரிட் அணியே நீடிக்கிறது.
LA LIGA CHAMPIONS! pic.twitter.com/H0L5d4wiAm
— FC Barcelona (@FCBarcelona) May 15, 2025