Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா வி...
10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!
பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை மாணவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்! பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!
இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்.
தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும், வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!