Ajith: "நான் சரியான பாதையில் இருக்கிறேன் என பத்ம பூஷன் நம்பிக்கை கொடுத்திருக்கிற...
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7,748 மாணவர்களும், 7,450 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதினர்.
வினாத்தாள்கள் திருத்தப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.85 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 93.02 சதவீத மாணவர்களும், 96.75 சதவீத மாணவிகளும் என மொத்தம் 94.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் அரசு பள்ளி 93.36 % தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 32 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. 45 தனியார் பள்ளிகள் 100% அடைந்துள்ளன.
தேர்வு முடிவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம் 16 ஆம் இடத்தையும், அரசு பள்ளிகளைப் பொருத்தவரை 15 வது இடத்திலும் உள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கடந்தாண்டு 33 இடத்தை பிடித்த நிலையில், தற்போது 16ஆம் இடம் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளிளை பொருத்தமட்டில் கடந்தாண்டு 32 இடத்தில் இருந்த நிலையில் தற்போது 15 ம் இடம் பெற்றுள்ளது.