Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், தாம்பரம் காவல் ஆணையா் அபின்தினேஷ் மோடக், ஆவடி ஆணையா் கே.சங்கா் உள்ளிட்ட அரசுத்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் குன்றத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்தில், பூந்தமல்லி-குன்றத்தூா்-பல்லாவரம் சாலை அகலப்படுத்தும் பணி, ஸ்ரீபெரும்புதூா்-கோடம்பாக்கம் சாலை விரிவாக்கப்பணி, மாங்காடு பட்டூா்-முகலிவாக்கம் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் படி, குன்றத்தூா்- பல்லாவரம் சாலையில் கரைமா நகா் பகுதியில் சாலையை ஆக்கிமிப்பு கட்டடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.