செய்திகள் :

`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன தெரியுமா?

post image

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த காஃபி என்ற 17 வயது மாணவி, தன்னுடைய மன உறுதியால், தொடர் முயற்சியால் பலர் மனங்களை கரைத்துள்ளார்.

பார்வையற்றோர் பள்ளியில் படித்த இவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த மாணவி காஃபி, `டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்று, இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாக வேண்டும்' என்றுஅவருடைய கனவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிட் தாக்குதல் எப்படி நடந்தது?

3 வயதில் நடந்த கோரம்...

மாணவி காஃபிக்கு 3 வயதில், ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். 2011-ல் ஹோலி பண்டிகையின் போது, பொறாமை காரணமாக 3 பேர் ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த தாக்குதலால் அவரது முகமும் கையும் வெந்தது. கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். கொடுமையான வலிகளைத் தாங்கினார். டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், இறுதியில் அவரது பார்வை பறிபோனது.

இத்தகைய மோசமான காலகட்டத்தைக் கடந்து வந்த காஃபி, தனது கனவுகளுக்காகப் போராடத் தொடங்கினார். தொடக்க கல்வியில் ஆடியோ புத்தகங்களை வைத்து படித்தார்.

பின்னர் முக்கிய திருப்பமாக, கிராமத்திலிருந்து வந்து சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் CBSE பள்ளியில் இணைந்தார். அங்கே எபோதும் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியாக இருந்துள்ளார்.

இருண்ட வாழ்க்கையின் கோரப்பிடியிலிருந்து கல்வி விடுவிக்கும் என்ற நம்பிக்கையுனும் விடாமுயற்சியுடனும் படித்து 10-ம் வகுப்பில் 95.2% மதிப்பெண் பெற்றார்.

14 ஆண்டுகளாய் கிடைக்காத நீதி...

காஃபியாவின் சாதனையால் மிகுந்த பெருமையடைந்துள்ளதாக கூறும் அவரது அப்பா, சண்டிகரில் உள்ள மினி செயலகத்தில் கான்ராக்ட் அடிப்படையில் பியூனாக பணியாற்றுகிறார்.

காஃபி ஏற்கெனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைவதற்கான நுழைவுத்தேர்வை எழுதியுள்ளார். நிச்சயமாக இடம் கிடைக்கும் என உறுதியாக இருக்கிறார்.

காஃபியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆசிட் வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் உள்ளனர் என்பது துரதிர்ஷ்டவசமானது. "எனக்கு இதைச் செய்தவர்கள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்" என வருத்தத்துடன் கூறுகிறார் காஃபி.

'பாப்பாவை விட்டு நகர முடியாது; சரியான வீடுகூட.!' - கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்தின் நிலை

பல ஆயிரக்கணக்கான பாம்புகளின் உயிர்களையும், அதன் மூலம் மனிதர்களின் உயிர்களையும் பாதுகாத்து வந்த, கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் நாகப்பாம்பு கடித்து கடந்த மார்ச் 19-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு... மேலும் பார்க்க

10th All Fail: ``தேர்வில்தான் தோல்வி, வாழ்க்கையில் அல்ல'' - மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி ஊக்கம்

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மகனை ஊக்கப்படுத்த, அவரின் பெற்றோர் கேக் வெட்டிக் கொண்டாடிய செயல் வைரலாகியிருக்கிறது.கர்நாடகாவிலுள்ள பாகல்கோட்டில் உள்ள பசவ... மேலும் பார்க்க

`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கிராமத்து நாயகன்

`விடாமுயற்சி என்றும் வெற்றியை கொடுக்கும்' என நிரூபித்துக் காட்டியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் மேலபனைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை, விஜயா தம்பதியினரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க்.மத்... மேலும் பார்க்க

''படி ஏற முடியாதுன்னு யாரும் வேலை கொடுக்கல'' - மாற்றுத்திறனாளி தம்பதியரின் வாழ்க்கைப் போராட்டம்!

ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதியின் கதையைக் கேட்டால், இமைகள் கண்ணீருக்குள் மூழ்கி விடும். தன்னம்பிக்கையின் பிறப்பிடமாக திகழும் இவர்களின் இருப்பிடமும் இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இரும்பு மனதையும் ... மேலும் பார்க்க

கடலூர்: தந்தையின் இறுதிச்சடங்கில் காதலியை மணந்த மகன்; நெகிழ வைத்த திருமணத்தின் பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம், கவணை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் – கண்ணம்மாள்.இவர்களின் மகன் அப்புவும், அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர... மேலும் பார்க்க