செய்திகள் :

10th All Fail: ``தேர்வில்தான் தோல்வி, வாழ்க்கையில் அல்ல'' - மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி ஊக்கம்

post image

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மகனை ஊக்கப்படுத்த, அவரின் பெற்றோர் கேக் வெட்டிக் கொண்டாடிய செயல் வைரலாகியிருக்கிறது.

கர்நாடகாவிலுள்ள பாகல்கோட்டில் உள்ள பசவேஷ்வர் ஆங்கில வழிக் கல்வி பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் சோழச்சகுடா. இவர், தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 32 சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, அதாவது 625 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து 6 பாடங்களிலும் ஒன்றில்கூட தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தார்.

10-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவனுக்கு பெற்றோர் கேக் வெட்டி ஊக்கம்
தேர்வில் தோல்வியடைந்த மாணவனுக்கு பெற்றோர் கேக் வெட்டி ஊக்கம்

இதனால், அவரின் நண்பர்களும் கூட கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் அபிஷேக்கின் பெற்றோர், தனது மகன் இந்தத் தோல்வியால் உடைந்துவிடக்கூடாது, மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் வகையில், மகனுக்கு கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர்.

மாணவன் - பெற்றோர்
மாணவன் - பெற்றோர்

இது குறித்து அபிஷேக்கின் பெற்றோர், "நீ தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் அல்ல. எப்போதும் மீண்டும் முயற்சி செய். அடுத்த முறை வெற்றி பெறலாம்." என்று மகனுக்கு உத்வேகம் அளித்தனர்.

அப்பா, அம்மாவின் ஆதரவால் நெகிழ்ந்த அபிஷேக், "நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். மீண்டும் நான் தேர்வெழுதுவேன். தேர்ச்சி பெறுவேன், வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கிராமத்து நாயகன்

`விடாமுயற்சி என்றும் வெற்றியை கொடுக்கும்' என நிரூபித்துக் காட்டியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் மேலபனைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை, விஜயா தம்பதியினரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க்.மத்... மேலும் பார்க்க

''படி ஏற முடியாதுன்னு யாரும் வேலை கொடுக்கல'' - மாற்றுத்திறனாளி தம்பதியரின் வாழ்க்கைப் போராட்டம்!

ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதியின் கதையைக் கேட்டால், இமைகள் கண்ணீருக்குள் மூழ்கி விடும். தன்னம்பிக்கையின் பிறப்பிடமாக திகழும் இவர்களின் இருப்பிடமும் இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இரும்பு மனதையும் ... மேலும் பார்க்க

கடலூர்: தந்தையின் இறுதிச்சடங்கில் காதலியை மணந்த மகன்; நெகிழ வைத்த திருமணத்தின் பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம், கவணை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் – கண்ணம்மாள்.இவர்களின் மகன் அப்புவும், அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர... மேலும் பார்க்க

நியதி சேத்ரான்ஷ்: அன்று 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை; ஆனால், இன்று...

பலநேரங்களில், நமக்கு எந்த வித தொடர்புமில்லாத, எங்கோ யாரென்ற தெரியாத ஒருவர் அடைகிற வெற்றி நமக்கு பெரும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமல்லவா? அதுவும் சிறுவயதிலேயே துன்பங்களைக் கடந்து ஒருவர் சாதித்தால்... அப... மேலும் பார்க்க

`அந்த உயிர்போனதுக்கு நானும் தான காரணம்' - யூடியூபரின் அந்த வீடியோவும், என் நினைவலைகளும்

அந்தப் பிரபல யூடியூபர்காரில் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ததையும், உதவி பெறுபவர்களின் இயலாமையைப் பார்த்து கேலி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு இருப்பதையும் பார்த்தேன். அந்த அதிர்ச்சியில்இருந்து மீள்... மேலும் பார்க்க