செய்திகள் :

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

post image

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சா் அமித் ஷா, 'நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை; யாரையும் அவா்களின் தாய்மொழியில் இருந்து விலக்கி வைக்க முடியாது. ஏறத்தாழ அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம்' என்று கூறியிருந்தார்.

மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். ஹிந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் காடும் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க