சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது.
இந்தநிலையில், ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டரெஸ் இந்தியாவையும் பாகிஸ்தானையும் குறிப்பிட்டு பேசியிருப்பதாவது: “மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் போர்ப் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஐ.நா. செயல்படத் தயாராக இருப்பதாகவும் அதன்மூலம், அமைதி நிலவ வேண்டும் என்றும்” அவர் இன்று(மே 5) குறிப்பிட்டுள்ளார்.