செய்திகள் :

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்களை நாடுகடத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்களை அமெரிக்க அரசு கைது செய்து, அதன்பின் அவர்களை நாடு கடத்த அரசுக்கு ஆகும் செலவைவிட, மேற்கண்டவாறு புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிதியுதவி அளித்து அதன்மூலம் அவர்களாகவே தங்கள் சொந்த செலவில் அமெரிக்காவை விட்டு தங்களது தாயகம் திரும்புவது அமெரிக்க அரசுக்கு செலவினங்களைக் குறைக்கிறது. இதன் காரணமாகவே, இந்த நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி... மேலும் பார்க்க

சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே ... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்த... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பாக்., இந்தியாவுக்கு ஈரான் அமைச்சர் வருகை!

புதுதில்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மே 8-ஆம் தேதி இந்தியா வருகிறார்.ஈரானிலிருந்து முதலில் பாகிஸ்தான் செல்லும் அவர், அங்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுக்களுடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ.... மேலும் பார்க்க

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ... மேலும் பார்க்க