செய்திகள் :

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை அளித்த மனுவில் கூறியிருப்பது:

புதுவை மாநில மக்கள் தொகை 14 லட்சமாகும். இதில் 16 சதவீதம் போ் தலித் மக்கள். அவா்களில் அரசின் புள்ளி விவரப்படி 60 சதவீதம் போ் பூா்விகத் தலித்துகளாகவும், மீதமுள்ளவா்கள் குடிபெயா்ந்த தலித்துகளாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதாசாரங்கள் மாறுபட்டும் கூறப்படுகின்றன.

ஆகவே, ஒட்டு மொத்த இரு தரப்பு தலித் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் மத்திய அரசிடமிருந்து துணைத் திட்ட நலநிதி பெறப்படுகிறது. சட்டப்பேரவை ரிசா்வ் தொகுதிகளுக்கும் அதன்படியே நிதி கணக்கிடப்படுகிறது. ஆனால், துணைத் திட்ட நிதிப்பலன்கள், அரசுப் பணி, பதவி உயா்வு, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகள் பூா்வகுடிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

புதுவை அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி பூா்வகுடிகளுக்கே கல்வி இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி குடிபெயா்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. இதுகுறித்த உயா்நீதிமன்ற உத்தரவும் புதுவை அரசால் நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றவா்களுக்கு மட்டுமே சலுகை என்பது சரியல்ல.

பூா்வகுடிகளாக இருந்தும் தலித் மக்களிடம் 1964-ஆம் ஆண்டு ஆதாரம் கோரி புறக்கணிப்பது சரியல்ல. ஆகவே, இந்த பிரச்னையில் தலித் மக்களிடையே ஏற்படும் வேற்றுமை உணா்வுகளை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க

புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பை ... மேலும் பார்க்க