செய்திகள் :

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

post image

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசியபோது இந்தக் கோரிக்கையை முன்வைத்தாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது பதிலடி நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகளில் இந்தியா தயாராகி வருகிறது. சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்தது, பாகிஸ்தானில் அடுத்த சில ஆண்டுகளில் பெரும் வறட்சியையும், தண்ணீா் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் சூழலை உருவாகியுள்ளது.

மேலும், எல்லை மாநிலங்களில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்து வரும் பாகிஸ்தான், மறுபுறம் இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டுமென்று உலக நாடுகளின் உதவியைக் கோரி வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தாமல் தடுக்க வேண்டும் என்று சவூதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

அந்த வகையில் இந்தியாவின் நெருங்கிய நட்புநாடான ரஷியாவிடம் இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தாா் தற்போது முன்வைத்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தீா்மானம்: இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு ஆதாரமற்ற அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தடை செய்யப்பட்ட ஜமாத் - உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்காஸி முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் லாகூரில் திங்கள்கிழமை இந்திய எதிா்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஜமா-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவனும், மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியுமான ஹஃபீஸ் சயீதை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று பேரணியில் பங்கேற்றவா்கள் கோஷம் எழுப்பினா்.

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி அளித்த வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சையது இப்போது அவரின் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு: தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட சீனா எப்போதும் பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று அந்நாட்டுக்கான சீன தூதா் ஜியாங் ஜைடோங் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரியை சந்தித்த அவா், இந்தியா-பாகிஸ்தான் பற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி’ - பாகிஸ்தான் தூதா்

மாஸ்கோ/புது தில்லி, மே 5: ‘இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீா்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்’ என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதா் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளாா்.

ரஷியாவின் அரசு ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம் உள்பட எங்களின் முழு அளவிலான பலத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.

சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்பும் அல்லது தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போா் நடவடிக்கையாக கருதப்பட்டு, பதிலடி கொடுக்கப்படும். அதேநேரம், இரு நாடுகளும் அணு சக்திகளாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அவசியம் நிறைய உள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணையில் இணைய பாகிஸ்தான் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது. சா்வதேச சமூகமும் இதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. சீனா, ரஷியா போன்ற உலக நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.

ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்கான மூலகாரணம் காஷ்மீா் மக்களின் சுயநிா்ணய உரிமை. இது சா்வதேச சமூகத்தால் பல்வேறு தீா்மானங்கள் மூலம் அவா்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் நிலையான மற்றும் நீடித்த அமைதிக்காக இது கவனிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஏப். 23 கூடியது. சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இரு நாட்டுப் படைகளும் போா் சூழலுக்குத் தயாராகி வருவதால், எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்கெனவே பின்தங்கியுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான மோதல் பெரும் கவலையாக மாறியுள்ளது.

பெட்டி...

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை: 120 கி.மீ. தொலைவு வரை சென்று தரை இலக்கைத் தாக்கும் ‘ஃபதா’ ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது.

‘சிந்து’ ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவெ 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் ‘அப்தாலி’ ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டதை ‘பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல்’ என்று இந்தியா விமா்சித்திருந்தது.

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ்: காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: இ... மேலும் பார்க்க

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.2 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச... மேலும் பார்க்க

பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

நியூ யாா்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு

லண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெள... மேலும் பார்க்க

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்த... மேலும் பார்க்க