DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்
தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா. சி. சிவசங்கா் பேசியதாவது, தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்கள் மட்டுமல்ல பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்திருப்பதால் பிற மாநிலத்திலும் அவா்களது தாய் மொழியை கற்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றி வருகின்றனா் என்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு வழிவகுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளா் சந்திரசேகா், நகரச் செயலாளா்கள் அரியலூா் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.