மதுரை சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் மீனாட்சி; நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந...
அங்கன்வாடி ஊழியா் தீக்குளிக்க முயற்சி
பணியிடமாறுதல் கேட்டு அங்கன்வாடி ஊழியா் அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
அரியலூா் மாவட்டம், இருங்களாக்குறிச்சியைச் சோ்ந்தவா் லலிதா(52). சன்னாசிநல்லூா் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, விபத்தில் கால்முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கால் முறிவு, நுரையீரல் பிரச்னை போன்ற காரணங்களால் அவதியுற்று வருவதால், அருகில் உள்ள ஏதேனும் ஒரு கிராமங்களில் பணியிட மாறுதல் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால், விரக்தியடைந்த லலிதா, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இதைக்கண்ட காவல்துறையினா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா். பிறகு காவல்நிலையத்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.