அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி...
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலி!
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோயில் குளத்தில் குளிக்கப் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் வந்துள்ளனர்.
மூவர் பலி
இதையடுத்து வீரராகவர் கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் சந்தியாவதனம் செய்வதற்காக குளத்தில் இறங்கிய போது ஒரு மாணவர் மூழ்கியுள்ளார். அந்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற போது மற்ற இரண்டு பேரும் சேர்ந்து மூன்று பேர் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
இதில், குன்றத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன் (24) ஆகிய மூவரும் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் புகார்
கோயில் குளத்தில் உள்ள நீரை அடிக்கடி மாற்றாமல் பச்சை பாசி படிந்து யாரும் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல் போதிய பாதுகாப்பு வசதி இல்லாதது மற்றும் குளத்து நீர் பாசி படிந்து காணப்படுவதாலும், குளத்தில் இறங்கி பக்தர்கள் குளிக்காதவாறு தடுப்புகளும் அமைக்காததாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு...!