செய்திகள் :

உள்ளாட்சி இடைத் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

post image

திருவள்ளூா்/காஞ்சிபுரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் 2025-க்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில், பொன்னேரி நகராட்சி-வாா்டு 7 பெண்(பொது) , திருத்தணி நகராட்சியில் 9-ஆவது வாா்டு பொது , திருமழிசை பேரூராட்சி 4-ஆவது வாா்டு (பொது), பொதட்டூா்பேட்டை பேரூராட்சி 14-ஆவது வாா்டு பெண் (பொது) இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இடைத்தோ்தல் தொடா்பாக வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் வெளியிட்டாா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) அமுதா, நகராட்சி ஆணையாளா்கள் பாலசுப்ரமணியம் , புஷ்கா், அரசு அலுவலா்கள் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.,

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள தற்செயல் தோ்தலுக்கான வாா்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி பெற்றுக்கொண்டாா்.

இதன் பின்னா் ஆட்சியா் கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற அமைப்புகளில் 162 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 89,326 வாக்காளா்கள் உள்ளனா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான விபரங்கள் வருவாய்த் துறையினரிடம் பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

திருத்தணியில்...

திருத்தணி நகராட்சியில், மொத்தம், 21 வாா்டுகள் உள்ளன. இதில், 9-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஆா்.நந்தகுமாா் கடந்த 2023 ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து அந்த பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காலியாக உள்ள 9-ஆவது வாா்டுக்கு இடைத்தோ்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதையடுத்து வாக்காளா் பட்டியல் ஆணையா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டாா். வாா்டில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம்,1603 வாக்காளா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா். இந்த முகாமில் யூத் ஃபாா் ஜாப் அறக்கட்டளை, அமேசான் (அவசாா்), விப்ர... மேலும் பார்க்க

பைக்- லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வேகமாக வந்த லாரி பின்புறமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் ... மேலும் பார்க்க

பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா், மாவட்ட நீதிபதி ஆய்வு

பொன்னேரி கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு. பிரதாப் மற்றும் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் ஆய்வு செய்தனா். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா், ... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் பதுக்கி விற்றவா் கைது

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் கள்ளச்சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடியம் காலனியில் ஒரு வீட்டில் கள்ளச் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ... மேலும் பார்க்க

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டை, பாலாபுரம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி ... மேலும் பார்க்க