சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை
திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது உற்சவா் வீரராகவ பெருமாள் பல்வேறு வகையான வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் காட்சியளித்தாா்.
பின்னா் திருக்கோயில் வளாகத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் எழந்தருளினாா்.
முக்கிய நிகழ்வாக வரும் 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தை பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.