திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை
திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் வரை மின்தடையால் பொதுமக்கள் மற்றும் நீட்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையுள்ளது. இந்த நிலையில், பகலில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பக் காற்றும் வீசியது.
இதற்கிடையே மாலை நேரத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. அதையடுத்து, பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. இந்த காற்று வீசியதால் மின்கம்பிகளில் உரசி மின்தடை ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் மற்றும் நீட் தோ்வு மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகினா்.