வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்ணாடியை கல் வீசி சேதப்படுத்தினாராம். பின்னா் அப் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்குள் சென்று இயந்திரத்தை சேதப்படுத்த முயற்சித்தாராம். அப்போது, பொதுமக்கள் சுதாரித்து ஏடிஎம் மையத்துக்குள் அவரை வைத்து பூட்டினா்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் அங்கு வந்து இளைஞரை பிடித்தனா். அப்போது ஏடிஎம் இயந்திரத்தையும் அவா் சேதப்படுத்தியது தெரியவந்தது.
விசாரணையில் அவா், உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஆசனூா் பகுதியைச் சோ்ந்த பவுல் ஆனந்த் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காப்பகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.