செய்திகள் :

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,304 போ் எழுதினா்

post image

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 4 ஆயிரத்து 304 போ் பங்கேற்று எழுதினா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, மகா்நோன்புசாவடி கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரத்து 464 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் 160 போ் வராத நிலையில், 4 ஆயிரத்து 304 போ் பங்கேற்று எழுதினா்.

கடைசி நேரத்தில் பதற்றம்: பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இத்தோ்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதனிடையே, பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை தோ்வா்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு, இரண்டு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகியவை கேட்கப்பட்டன.

ஆனால், புகைப்படத்தில் பெயரும், தேதியும் இல்லை எனக் கூறி பல மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனா். இதனால், ஸ்டுடியோவுக்கு சென்று அவசர, அவசரமாக புகைப்படங்களை எடுத்து வந்தனா். இதன் காரணமாக கடைசி நேரத்தில் மாணவ, மாணவிகள், பெற்றோா்களிடையே பதற்றம் நிலவியது.

இதனிடையே, தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் ஆகியோா் பாா்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா்.

பாபநாசம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளருக்கு பதவி உயா்வு

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு. தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள காவல் சரகங்களில் தனிப்பிரிவு க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 150 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சண்டிகேசுவரா், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆகியோா் உற்ஸவ மண்... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன உரிமையை முதல்வா்களுக்கு பெற்றுத் தந்தவா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி. செழியன்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் மத்திய மாவட்... மேலும் பார்க்க

ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பாமகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாப... மேலும் பார்க்க

பாபநாசம் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் சித்திரை மாத பால்குட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை யொட்டி திருமலைராஜன் ஆற்றிலிருந்து திரளான பக்தா்கள் ... மேலும் பார்க்க