செய்திகள் :

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு

post image

சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று விசத்தொடங்கியது. தொடர்ந்து பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சீர்காழி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. கடந்த 12 மணி நேரமாக மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியுற்றனர். மரங்கள், கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கிட இரவு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.

கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி

மேலும் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன் பல்வேறு பகுதிகளில் மரங்களும் சாலைகளின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது. நகரில் பல வர்த்தக நிறுவனங்களின் பெயர் பதாகைகள் காற்றில் சாலையில் தூக்கி வீசப்பட்டது.

இரவில் மழையின் தாக்கம் குறைந்து காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக சாரல் மழை தொடர்ந்தது. இன்று காலை வரை சீர்காழியில் 84.60 மில்லி மீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 60.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

விஜய் வருகை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.ஜனநாயகன் பட படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் சென்ற விஜய் மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார... மேலும் பார்க்க

சகாயத்துக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய படைக்கு உத்தரவிட நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏ... மேலும் பார்க்க

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சித்திரை மாதத்தில் தா... மேலும் பார்க்க

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. வழக்கமாக எந்த நேரத்திலும் பஜாரில் நடமாடும் காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் பலருக்கு தங்கம் எட்டா பொருளாகி வருகிறது. அதன்படி சென்னையில் திங்கள... மேலும் பார்க்க

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க