செய்திகள் :

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சித்திரை மாதத்தில் தான் பெரும்பாலான கோயில்களில் திருவிழா, காதுகுத்து உள்ளிட்ட சுப விழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.

அதோடு சித்திரை மாதத்தில் காதுகுத்து, சடங்கு உள்ளிட்ட சில சுப வைபவங்களும் நடைபெறும். இதனால், பொதுவாக சித்திரை மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தையில் களைகட்டும்.

அதோடு ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும்.

அந்த வகையில், திங்கள்கிழமை காலை விராலிமலையில் கூடிய ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் அதிகாலையிலேயே விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்கு பல்வேறு வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் சந்தையில் குவிந்தனர்.

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இதனால் கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் ஈட்ட முடிந்தது.

இன்று கூடிய சந்தையில் 5 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 8 ஆயிரத்திற்கும், எட்டு கிலோ எடை கொண்ட ஆடு 11 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரத்துக்கும் , 15 கிலோ கொண்ட ஆடு 20 ஆயிரம் வரை விலை போனதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விலை அதிகமாக இருந்த போதும் கோயில்களில் நேர்த்திக் கடனுக்காக வெள்ளாடுகள் மட்டும் பலியிடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சென்றதால் வர்த்தகம் சுமார் காலை 7.45 நிலவரப்படி ஒன்றரை கோடியை தாண்டியது.

இது போன்ற விழா காலங்களில் தான் தாங்கள் உழைப்புக்கு தகுந்த லாபம் ஈட்ட முடிவதாக ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ... மேலும் பார்க்க

5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!

மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. ... மேலும் பார்க்க

வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜான்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்... மேலும் பார்க்க

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!

சென்னை: வெய்யில் இப்படி கொளுத்துகிறதே என்று புலம்பிவந்த தமிழக மக்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று தெரிந்தபோதே வெப்பத்துக்கு இணையாக அச்சமும் அதிகரித்தது.இதோ அதோ என்று சொல்லிவந்த அக்னி நட்ச... மேலும் பார்க்க

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி... மேலும் பார்க்க