Career: வங்கியில் 'மேனேஜர்' பணி; யார் விண்ணப்பிக்கலாம்?
யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
என்ன பணி?
கிரெடிட் மற்றும் ஐ.டி. பிரிவுகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 500
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.48,480 - 85,920
கல்வி தகுதி:

குறிப்பிடப்பட்ட பணிக்கு தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு மற்றும் சில அனுபவங்கள் இருந்தால் நல்லது.
குறிப்பு:
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் புரோபேஷனில் இருப்பார்கள். மேலும், வங்கியுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல்.
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கே?
சென்னை, கோவை, திருச்சி.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20, 2025
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.