செய்திகள் :

Appraisal-ன் போது, அதிக சம்பள உயர்வு வேண்டுமா? நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டிரிக்ஸ்!

post image

வேலைக்கு செல்வோர் பலருக்கும் முக்கியமான ஒன்று 'சம்பளம்'.

ஒவ்வொரு ஆண்டும், நம் திறன் மற்றும் வேலையை பொறுத்து சம்பளம் ஏற்றப்படும். 'அப்ரைசல்' (Appraisal) என்ற நடைமுறைக்கு பிறகே, இந்த சம்பள ஏற்றம் நடக்கும்.

இந்த அப்ரைசலில் தான், 'கடந்த ஓராண்டாக நாம் என்ன செய்திருக்கிறோம்?', 'இனி என்ன செய்யப்போகிறோம்?', 'நம்முடைய வேலை எப்படி இருந்திருக்கிறது?' என்பதை ஆராய்ந்து நமக்கான சம்பள உயர்வை நிறுவனங்கள் முடிவு செய்யும்.

மனிதவள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்
மனிதவள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்
'இந்த அப்ரைசலின் போது ஸ்கோர் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?' என்கிற டிப்ஸை தருகிறார் மனித வள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்.

"அப்ரைசல் மீட்டிங்கின் போது, 'நான் இதை செய்தேன்', 'நான் அதை செய்தேன்' என்று செய்த வேலைகளை அடுக்குவதைக் காட்டிலும், அதனால், நிறுவனத்திற்கு என்ன லாபம் என்பதை தெளிவாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் செய்த வேலைகளை பக்காவாக நாமே முடித்திருக்க வேண்டும்.

நாம் செய்திருந்த வேலை பிறருக்கு அதாவது வாடிக்கையாளர்கள், நிறுவனத்திலேயே பிற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பிடித்திருந்து, அதுக்குறித்து நம்மை பாராட்டியிருந்தால், அதை இந்த மீட்டிங்கின் போது எடுத்துகாட்டுவது மிக முக்கியம்.

சம்பள உயர்வு

நாம் எதாவது தனித்துவமாக செய்திருந்தாலோ, எதிலாவது கலந்துகொண்டிருந்தாலோ அப்ரைசல் மீட்டிங்கின் போது அந்தத் தரவுகளை எடுத்து வைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

அப்ரைசல் மீட்டிங்கில் இரண்டு விதமாக நாம் தரவுகளை வைத்திருக்க வேண்டும். ஒன்று, தரத்தில் அடிப்படையிலானது. இன்னொன்று, எண்ணிக்கை அடிப்படையிலானது.

நிறுவனத்தின் கொள்கைகளின் படி, 'நமது பணிகளை எப்படி செய்தோம்?', 'டீமோடு எப்படி இணைந்து பணிபுரிந்தோம்?' போன்றவற்றை தெளிவாக அப்ரைசலில் பேசும்போது, இது நிச்சயம் நமது சம்பள உயர்வில் பிரதிபலிக்கும்".

'இந்தப்' படிப்புகளை படித்திருந்தால் தேசிய வங்கியில் பணி! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Financing Infrastructure and Development) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? ஹெச்.ஆர், அக்கவுண்ட், சட்டம், ரிஸ்... மேலும் பார்க்க

Career: நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஜூனியர் ஓவர்மேன் (பயிற்சி), மைனிங் சிர்டர் (கிரேடு 1).மொத்த காலிப் பணியிடங்கள்: 171வயது வரம்பு: அதிகபட்சமா... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்; எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நுண்ணுயிரியலாலர், ஆய்வகநுட்புநர், பல்நோக்கு மருத்துவப்பணியாளர் ஆகிய பணிகள். இது 6... மேலும் பார்க்க

Career: ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்-ல் (Indian Institute of Technology, Madras) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணிகள்?லைப்ரேரியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு... மேலும் பார்க்க

Career: பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சோப்தார், ஆபீஸ் அசிஸ்டன்ட், ரெஸிடென்ஷியல் அசிஸ்டன்ட், ரூம் பாய். மொத்த காலி பணியிடங்கள்: 240சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு:... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்' பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சமையல் உதவியாளர்.இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமி... மேலும் பார்க்க