தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் ...
அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. நேற்று தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர் இன்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ராகுல் காந்தி ஆயுத தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 2019 மார்ச் அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட அதே வளாகத்தில் அமைந்துள்ள இந்திய-ஆசிய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் பிரிவையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் தற்போது துப்பாக்கிகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
ராகுல்காந்தி தொழிற்சாலைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டு, துப்பாக்கிகளை ஆய்வு செய்தார், உற்பத்தி செயல்முறைகளைப் புரிந்துகொள்ள அதிகாரிகளுடன் உரையாடினார்.
இதைத் தொடர்ந்து, அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு சுமார் ரூ.3.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய இதயப் பிரிவையும் அவர் திறந்து வைத்தார். அதோடு
மருத்துவமனையால் இயக்கப்படும் புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் காங்கிரஸ் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியைப் பார்வையிட்டார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார், மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
சஞ்சய் காந்தி மருத்துவமனை, இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி இரண்டும் புது தில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகின்றன, இதன் தலைவராகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் உள்ளனர்.