கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத்தான், ஒவ்வொரு நபரின் முன்னேற்றத்தையும் முழுமையாக உறுதிப்படுத்த முடியும்.
மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்க, பட்ஜெட் ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது’’ என்று தெரிவித்தார்.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது ஒரு பெரிய தேர்தல் பிரச்னையாகவும் உருமாறியது. பிகார், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
இதையும் படிக்க:சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்