செய்திகள் :

மோதலைக் கைவிட்டு இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சௌதி அரேபியா!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம் குறித்து சௌதி அரேபியா அரசு கருத்து தெரிவித்துள்ளது.

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில், 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஈடுபாடுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன் இரு நாடுகளும் தங்களது குடிமக்களை தாயகம் திரும்ப அறிவுறுத்தியதுடன், போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர். இத்தகைய, பதற்றமான சூழலில், இந்தியாவின் முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்.29) முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கும் அபாயமுள்ளதினால், இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வுக் காண சௌதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சௌதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் இரு நாடுகளின் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து சௌதி அரேபிய அரசு அதன் வருத்ததைத் தெரிவித்து கொள்கின்றது. எனவே, இருநாடுகளும் போர் நடவடிக்கைகளை தவிர்த்து, அவர்களுக்கு இடையிலுள்ள பிரச்னைகளை ராஜத்தந்திர முறையில் தீர்வுக் காண வேண்டும்.’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களின் நலனுக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் மேற்கொண்டு போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சௌதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமத்துவத்தை உறுதி செய்துள்ளது பாஜக அரசு!

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்... மேலும் பார்க்க

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரி... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க