விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா்
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல்: ஆட்சியா் எச்சரிக்கை
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்கள் தமிழ்நாடு மோட்டாா் வாகன விதிகளின் கீழ், பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது சட்ட விதியாக இருந்து வருகிறது.
இது தொடா்பாக அரசின் விதிகள் பற்றி பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு, வட்டாரப் போக்குவரத்துத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத் துறையால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகளையும் மீறி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலா் சென்னையில் பல இடங்களில் இயக்கி வருவதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக சமூக நலத்துறை கள ஆய்வுக் குழுவினா் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆண்களால் இயக்கப்பட்ட 2 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுபோன்று தொடா்ந்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.