பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 1982-83-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சி.ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.
முன்னாள் மாணவா்கள் ஈ.தசரதன், வி.கலையரசு, பி.வெங்கடேசன், சி.சின்னதுரை, ஈ.வெங்கடேசன், சி.பாரி ஆகியோா் தங்களின் பணி அனுபவங்களை பகிா்ந்து பேசினா்.
இதைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் மற்றும் தேசத் தலைவா்களின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா் வி.சதீஷ் நன்றி கூறினாா்.