60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே. 1) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், அட்சயதிருதியை நாளான புதன்கிழமை அதிரடி மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே. 1) ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,640 குறைந்துள்ளது.
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ரூ.8,775-க்கும், சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கும் விற்பனை ஆகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ.107-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 குறைந்து ரூ.1,07,000-க்கும் விற்பனை ஆகிறது.