அட்சய திருதியை: தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!
திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ நீளத்துக்கான ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை எல்லை சாலைத் திட்டம் மூலம் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ தூரம் ரூ.2689 மதிப்பில் ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்கும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எண்ணுார் துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், மாநிலத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படவுள்ளது.
சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிவு-3 இன் படி திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 30.10 கி.மீ நீளத்துக்கு புதிய 6 வழிச்சாலை மற்றும் இருவழி சேவைச்சாலை (இருபுறமும்) அமைக்க மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் புறவழிச்சாலையிலிருந்து வெங்காத்தூர் வரை 10.4 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ.1133.20 கோடி மதிப்பிலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10.00 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ. 593.27 கோடி மதிப்பிலும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.70 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ.963.27 கோடி மதிப்பில் என மொத்தம் 30.10 கி.மீட்டர் சாலைப் பணிகள் ரூ.2,689.74 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணியில், உயர்மட்ட மேம்பாலம் - 2 எண்கள், ரயில்வே மேம்பாலம்- 1 எண் மற்றும் பெரிய பாலம் - 2 எண்கள் கட்டப்படவுள்ளது.
மேலும், சென்னை எல்லைச் சாலைத் திட்டம் பிரிவு-1 எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி தச்சூர் வரை 25.40 கி மீ நீளத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிக்காக ரூ. 2122.10 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 35 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?
சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு-2 தச்சூரில் தொடங்கி திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 26.10 கிலோ மீட்டர் நீளத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-2 இல் கட்டுமானப் பணிகள் இரண்டு செயல்பாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.1539.69 கோடிக்கு செயல்படுத்தப்பட்டு, தற்போது வரை 68 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு -4 இன் படி ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி சிங்கப்பெருமாள் கோயில் வரை 23.80 கி.மீ நீளம் கொண்டதாகும். இந்த சாலை மாநில அரசின் செலவில் ஏற்கனவே ஆறுவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப உயர்த்தி நுழைவு கட்டுபடுத்தப்பட்ட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு - 5 இன் படி சிங்கப்பெருமாள் கோயில் முதல் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பு வரை மொத்தம் 28.24 கி.மீ நீளம் அமைக்கப்படவுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.