இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!
ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!
ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
இதையும் படிக்க: தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்
ரிக்கி பாண்டிங் பாராட்டு
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியான வீரராக மாறிவிட்டதாகவும், ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்வதாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. அவரது அனுபவமும் அதிகரித்துள்ளது. தற்போது அவர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்பு ஆட்டத்தின் சூழல்களை புரிந்துகொண்டதைக் காட்டிலும் தற்போது அவர் மிகவும் நன்றாக ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.