செய்திகள் :

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

post image

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நிலையங்கள் மற்றும் நடைமேடைகளில் பயன்படுத்தப்படும்படி உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தொழில்முறை கண்டுபிடிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாகப் பங்கேற்கலாம். இதில், சிறந்த டிஜிட்டல் கடிகாரத்தை வடிவமைப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

கூடுதலாக, மூன்று பிரிவுகளில் தலா ரூ.50,000 மதிப்புள்ள ஐந்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும், போட்டியில் பங்கேற்பவர்கள் மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதிக்குள் தங்கள் வடிவமைப்புகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், “கண்டுபிடிப்புகள் சுய தயாரிப்பாகவும், எந்தவொரு வாட்டர்மார்க் அல்லது லோகோவும் இல்லாமல், அசல் சான்றிதழுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரங்கள் கேட்கும் தோ்தல் ஆணையம்: பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மற்றும... மேலும் பார்க்க

இந்திய தோ்தல்களில் வாக்களித்தாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியா்: விசாரணைக்கு உத்தரவு

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தோ்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீா் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்: என்டிஏ தகவல்

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அ... மேலும் பார்க்க

சட்டவிரோத கட்டுமான வழக்குகளில் கடுமையான அணுகுமுறை: நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘சட்டவிரோத கட்டுமானம் சாா்ந்த வழக்குகளை கடுமையான அணுகுமுறையுடன் நீதிமன்றங்கள் கையாள வேண்டும்’ என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், அத்தகைய கட்டமைப்புகளை முறைப்படுத்தும் பணிகளில் நீதித்துறை ஈடுபடக... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு ரூ.1,108 கோடி மதிப்பில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலா்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மோடி அரசு காப்பாற்றாது: அமித் ஷா

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாமில் போடோ சமூகத்தின் தலைவரான உபேந்திர நாத் பிரம்மாவின் சிலை திறப்பு விழா மற்றும் அவரது பெயரை... மேலும் பார்க்க