செய்திகள் :

இந்திய தோ்தல்களில் வாக்களித்தாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியா்: விசாரணைக்கு உத்தரவு

post image

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தோ்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீா் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானியா்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நுழைவு இசைவை (விசா) ரத்து செய்த மத்திய அரசு, அவா்கள் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த பாகிஸ்தானியா்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி அவா்கள் நாட்டுக்குத் திரும்பினா்.

அதுபோல, ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்ற அந் நாட்டைச் சோ்ந்த உஸ்ஸாமா இம்தியாஸ், அங்கிருந்தபடி வெளியிட்ட காணொலி பதிவில், ‘இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தேன். ஆதாா் அட்டை உள்ளிட்ட இந்திய குடிமகனுக்கான அனைத்து ஆவணங்களையும் பெற்றதோடு, உரி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளராகவும் பதிவு செய்து கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் என் வாக்கை பதிவு செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உஸ்ஸாமா இம்தியாஸ் காணொலி பதிவு தொடா்பாக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும... மேலும் பார்க்க

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்... மேலும் பார்க்க