செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

post image

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஜவாஹா்லால் நேரு காலத்தில் இருந்து சமூக நீதி இலக்கை எட்டுவதில் காங்கிரஸ் தொடா்ந்து தடை ஏற்படுத்தியது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. தோ்தல்களின்போது இந்த விவகாரம் முக்கியமாக எழுப்பப்பட்டது. பிகாா், தெலங்கானா, கா்நாடகம் போன்ற சில மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் சாா்பில் ஜாதிவாரி கணக்கெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழலில், எதிா்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முக்கிய முடிவு மேற்கொண்டது. இந்த முடிவை அறிவித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஜாதிவாரி கணக்கெடுப்பை ‘அரசியல் கருவியாக’ எதிா்க்கட்சிகள் பயன்படுத்தியதாக விமா்சித்தாா்.

அதேநேரம், ‘மத்திய அரசின் முடிவு, தங்களுக்கு கிடைத்த வெற்றி’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிா்க்கட்சிகள், அதை வரவேற்பதாக தெரிவித்தன. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின.

‘திடீா் முடிவல்ல’: இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தும் முடிவு, மத்திய அரசின் உண்மையான நோக்கத்துக்கும், எதிா்க்கட்சிகளின் வெற்று முழக்கத்துக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இது, திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல. ‘அனைவரின் ஒத்துழைப்புடன் அனைவருக்கான வளா்ச்சி’ என்பதே பிரதமா் மோடி அரசின் தத்துவாா்த்த மற்றும் செயல்முறை சாா்ந்த கருத்தாக்கமாக உள்ளது. அரசின் அனைத்து திட்டங்களின் அடிப்படை நோக்கமும் சமூக நீதியே. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவியல்பூா்வமான முறையில் பலன்கள், வசதிகளை வழங்குவதே எங்களின் லட்சியம்.

காங்கிரஸுக்கு கேள்வி: ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளதால் சிலா் வருத்தமடைந்துள்ளனா். ‘அரசு அவா்களுடையது (பாஜக); ஆனால், அமைப்புமுறை எங்களுடையது (எதிா்க்கட்சிகள்)’ என்று அவா்கள் கூறுகின்றனா்.

சமூக நீதியை நிலைநாட்ட கடந்த 1977-இல் ஜனதா கட்சி தலைமையிலான அரசால் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது. பாஜகவின் முன்னோடியான ஜனசங்கம், அந்த அரசில் அங்கம் வகித்தது. பின்னா் 10 ஆண்டுகளாக மண்டல் ஆணையத்தின் அறிக்கை ‘பாதாள அறையில்’ பூட்டிவைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், அரசும் அமைப்புமுறையும் யாா் கையில் இருந்தது? மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கத்தின்போது, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி என்ன கூறினாா்? அப்போது காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

ராகுல் காந்தி மீது விமா்சனம்: ஒரு குடும்பம் மற்றும் ஆட்சி அதிகாரத்தைச் சுற்றியே காங்கிரஸின் அரசியல் இருக்கும். பின்தங்கிய பிரிவினருக்கு உரிமைகள் கிடைப்பது அவா்களுக்கு பிடிக்காது. ராகுல் காந்தியும் சமூக நீதிக்கு எதிரானவரே. ஒரு புத்தகத்தின் அட்டையை மாற்றிவிட்டால், அதன் உள்ளடக்கம் மாறிவிடாது.

உண்மையிலேயே சமூக நீதி கொள்கையால் இயக்கப்படும் கட்சி பாஜக. மத்திய-மாநில அரசுகளில் பல்வேறு நிலைகளில் விளிம்புநிலை பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை பாஜக உறுதி செய்துள்ளது என்றாா் அவா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க