கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்
பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துகள் பகிரப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகா், நடிகைகளான மஹிரா கான், ஹனியா அமீா், சனம் சையது, அலி ஃஷாபா், பிலால் அப்பாஸ் உள்ளிட்டோரின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இவா்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்தியாவில் இருந்து பாா்க்க முயலும்போது, ‘இந்த கணக்கு இந்தியாவில் கிடைக்காது. சட்டப்பூா்வமாக வந்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தான் பாடகா்கள் உள்ளிட்ட சில கலைஞா்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இப்போது வரை முடக்கப்படவில்லை.