ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாத்தனூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி அம்பிகை சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமந்திரம் அருளிய திருமூலருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருக்கோயிலாகவும், ஆண்டு முழுவதும் சூரிய கதிர்கள் சிவபெருமானை வழிபடும் சிறப்பு கூறிய கோயிலாகவும் விளங்கக்கூடியது.
இந்த திருக்கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த 30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் விமான கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா குடமுழுக்கு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.