ஐபிஎல்லில் புதிய சாதனை! ஜோஸ் பட்லர் அசத்தல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன் - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் ரன்கள் 224 எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 64 ரன்களும் (37 பந்துகளில், 4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தனர்.
இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 12 ரன்கள் எடுத்தபோது, தனது டி20 வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல்லில் 4,000 ரன்களை நிறைவு செய்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும், 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய மூன்றாவது வேகமான பேட்ஸ்மேனாக என்ற சிறப்பையும் பட்லர் பெற்றுள்ளார்.
குறைந்தபந்துகளில் 4000 ரன்களை எட்டியவர்கள்
ஏபி டிவில்லியர்ஸ் - 2658 பந்துகள்
ஜோஸ் பட்லர் - 2677 பந்துகள்
சூர்ய குமார் யாதவ் - 2714 பந்துகள்
ஐபிஎல்லில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பட்லர், 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதில், 7 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களும் அடங்கும்.
இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?