ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று (மே 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி வருகிற மே 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
Who are you most excited to see in action this summer? #ENGvZIM | #EnglandCricketpic.twitter.com/hfkH862LEM
— England Cricket (@englandcricket) May 2, 2025
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க்.