பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!
ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் 1,008 ஆவது ஜெயந்தி விழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் இராமானுஜரின் 1008 வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் இராமானுஜரின் பூத உடல் பாதுகாக்கப்படும் நிலையில், இவா் எழுதிய வைத்தபடிதான் இன்றளவும் ஸ்ரீரங்கம் கோயிலில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இராமானுஜரின் 1,008 வது ஜெயந்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை அவரது உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, திரு வீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தாா். ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.