பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
சிம்பு - 49 பூஜையுடன் ஆரம்பம்!
நடிகர் சிம்புவின் 49-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர் - 49’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலம் கழித்து சந்தானமும் காமெடியனாக இப்படத்தில் நடிப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா