பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது புரமோ!
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தின் புதிய புரமோ வெளியாகியுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படத்தில் பேசியுள்ளதாகத் தெரிகிறது. படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் பெயருக்கான புரமோவை வெளியிட்டுள்ளனர். அதில், ரியோ பேசும் வசனங்கள் படத்தின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது.
இதையும் படிக்க: பைசன் வெளியீடு அறிவிப்பு!