பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
பைசன் வெளியீடு அறிவிப்பு!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கிற படத்தை உருவாக்கி வருகிறார்.
இதில் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால தயாரிப்பிலிருக்கும் படமென்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் பெயர் டீசர்!