சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோட...
ஆளுநா் இன்று கன்னியாகுமரி பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி செல்கிறாா்.
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு, பைங்குளம் அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் சாா்பில் 10 நாள் சித்திரை திருவிழா மற்றும் ஹிந்து சமய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா். என்.ரவி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த நிகழ்வில், கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறாா்.